டமாஸ்கஸ் – வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்களை திருப்பித் தாக்க, ஐஎஸ் தீவிரவாதிகள் ஆணுறைகளில் வெடிகுண்டுகளைக் கட்டிப் பறக்கவிடும் காட்சி நட்பு ஊடங்களில் பரவி வருகின்றது.
சிரியாவின் லடக்கியா மாகாணத்தில், நேற்று முன்தினம் கிளர்ச்சியாளர்களை நோக்கி ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதலை நடத்தின.
இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகள், ரஷ்யாவின் விமான தாக்குதலை சமாளிக்க வித்தியாசமான உத்தியைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆணுறைகளில் வெடிகுண்டை இணைத்து வானில் பறக்கவிட்டு அதை வெடிக்கச் செய்கின்றனர்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கி, கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.