Home Featured நாடு 2016 பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

2016 பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

647
0
SHARE
Ad

najibarrivingparliament2310கோலாலம்பூர் – 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் 4 மணியளவில் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சரின் அறிக்கை பின்வருமாறு:

1.  6.7% முதலீடு மற்றும் 6.4 % தனியார் நுகர்வின் காரணமாக 2016-ல் பொருளாதாரம் 4-5% வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

2. நிதிப்பற்றாக்குறை 6.7% இருந்து 3.2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

3. 2015- முதல் பாதியில் மலேசிய 5.3% பொருளாதார வளர்ச்சியை எட்டியது.

4. 2015 – முதல் பாதியில் அந்நிய முதலீடுகள் 22.4 பில்லியனை எட்டியது.

5. ஜிஎஸ்டி இல்லாமல் மலேசியாவின் நிதிப் பற்றாக்குறை 4.8% ஆகும். எதிர்பார்க்கப்பட்ட 3.1% அல்ல

6. கடந்த 2015-ல் ஒதுக்கப்பட்ட 260.7 பில்லியன் நிதியைக்காட்டிலும் 2016-ம் ஆண்டிற்கு 267.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

7. மொத்த 6.7 பில்லியன் நிதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் 9 உள்ளூர் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

8. 2016 பட்ஜெட்டின் முக்கியத்துவமே உள்ளூர் முதலீடுகளை 26.7% அளவிற்கு பங்களிக்க வைப்பது தான்.

9. இந்த வரவு செலவுத்திட்டம் தனியார் முதலீடுகளை 218.6 பில்லியனாகவும், பொது முதலீடுகளை 112.2 மில்லியனாகவும் வளர்ச்சியடைச் செய்வது தான்.

10.ஜாலான் துன் ரசாக் போக்குவரத்து நெரிசல் குறைப்பு திட்டத்திற்கு 900 மில்லியன் ரிங்கிட்

11.பெல்டா குடியிருப்புகளின் சாலை வசதிகள் அதிகரிக்க 200 மில்லியன் ரிங்கிட்

12.இணையத்தின் வேகத்தை 5 எம்பிபிஎஸ் முதல் 20 எம்பிபிஎஸ் வரை அதிகரிக்கும் திட்டத்திற்கு 1.2பில்லியன் ரிங்கிட்

13.நாடெங்கிலும் 700 கிலோமீட்டர் அளவில் சாலைகளை சீரமைப்பதற்கு 1.4பில்லியன் ரிங்கிட்

14.நகரெங்கும் பேருந்து வசதிகளை இயக்க 67மில்லியன் ரிங்கிட்

15.பொருளாதாரத்திற்கு 103 பில்லியன் ரிங்கிட் சுற்றுலாத்துறை பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2016 மத்தியில் 7 நாடுகளுக்கு செல்லும் இ-விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

16.நவீனப்படுத்தப்பட விவசாயத்திற்கு 5.3 பில்லியன் ரிங்கிட்

17.புதிய எம்ஆர்டி திட்டங்களுக்கு 28பில்லியன் ரிங்கிட்

18.ஜனவரி 2016 முதல் 3000 ரிங்கிட் மற்றும் அதற்குக் குறைவான வருமானம் பெரும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக 100 ரிங்கிட் வழங்கப்படும்.

19.1.2 மில்லியன் மாணவர்களுக்கு 250 ரிங்கிட் மதிப்புள்ள ஒரே மலேசியா புத்தக உதவித்தொகை

20. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு 930 மில்லியனுடன், விளையாட்டாளர்களுக்குப் பயிற்சியளிக்க 145மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

21. பிரிம் 1050 ஆக உயர்த்தப்பட்டு, 4.7 மில்லியன் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ளது.

 

(மேலும் செய்திகள் தொடரும்)