Home Featured நாடு பட்ஜெட் 2016: இந்தியத் தொழில் முனைவோருக்கு 100 மில்லியன் ரிங்கிட்!

பட்ஜெட் 2016: இந்தியத் தொழில் முனைவோருக்கு 100 மில்லியன் ரிங்கிட்!

696
0
SHARE
Ad

najibarrivingparliament2310கோலாலம்பூர் – நேற்று 2016-ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மலேசியாவிலுள்ள இந்திய சமுதாயத்திற்கென சில திட்டங்களை அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்திய தொழில்முனைவோர் வளர்ச்சித் திட்டத்தின் படி, 10 ஆயிரம் இந்தியத் தொழில்முனைவோருக்கு 100 மில்லியன் கடன் உதவி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியத் தொழில்முனைவோருக்கு உதவ எஸ்எம்இ வங்கி 50 மில்லியன் நிதி வழங்குகிறது.

#TamilSchoolmychoice

இந்திய சமுதாய பொருளாதார வளர்ச்சித் திட்டத்தின் படி, தனியார் திறன் பயிற்சி மையங்களுக்கு 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பள்ளி வளர்ச்சி மற்றும் வசதி மேம்பாடுகளுக்கென 50 மில்லியன் (பள்ளிகளுக்கென கல்வியமைச்சிற்கு ஒதுக்கபட்ட 500 மில்லியனில் இது அடக்கம்)