Home Featured கலையுலகம் விவேக் மகன் திடீர் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

விவேக் மகன் திடீர் மரணம்: திரையுலகத்தினர் அதிர்ச்சி

636
0
SHARE
Ad

Tamil Actor Vivekசென்னை- பிரபல நடிகர் விவேக்கின் மகன் டெங்கி காய்ச்சல் காரணமாக காலமானது தமிழ்த் திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விவேக் மகன் பிரசன்னா (13 வயது) கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் அதற்கான காரணம் தெரியவில்லை.
பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே டெங்கி காய்ச்சலால் பிரசன்னா பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதற்குள் காய்ச்சல் தீவிரமடைந்ததால், சுய நினைவை இழந்தான் பிரசன்னா.

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பிரசன்னா இன்று உயிரிழந்தான். தமிழ் கூறும் நல்லுலகை தனது நகைச்சுவையால் பரவசப்படுத்தி வந்த கலைஞரான விவேக் மற்றும் அவரது குடும்பத்தார் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மக்களை தனது எண்ணற்ற படங்களின் வழியாக தனது நகைச்சுவையால் சிரித்து மகிழ்வித்ததோடு அல்லாமல்,

முன்னாள் இந்திய அதிபர் அமரர் அப்துல் கலாம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழ் நாடெங்கும் மரம் நடுவதில் தீவிர ஆர்வம் காட்டிய விவேக் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அவர்கள் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ள இந்த தருணத்தில் செல்லியல் குழுமம் தனது இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறது.