Home கலை உலகம் தனுஷுக்கு தந்தையாக நடிக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

தனுஷுக்கு தந்தையாக நடிக்கிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!

529
0
SHARE
Ad

dhansuh saccசென்னை – நடிகர் தனுஷ் அடுத்ததாக ‘காக்கி சட்டை’ படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் தனுஷுக்கு, தந்தையாக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் படத்திலும், தான் இயக்கிய படங்களிலும் மட்டுமே நடித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தனுஷ் படத்தில் நடிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமகால அரசியலை பேச இருக்கும் இப்படத்தில், சிறுவயதிலிருந்தே தனுஷுக்கு அரசியல் ஆசையை வளர்க்கும் கனமான தந்தை கதாப்பாத்திரத்தில் எஸ்.ஏ.சி நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

அதேபோல், இதுவரை படங்களில் நடித்திராத பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன், நடிகர் விஜய்யின் புதிய படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.