Home Featured தமிழ் நாடு அதிமுக மட்டுமல்ல திமுகவும் வேண்டாம் – விஜயகாந்த் அதிரடி!   

அதிமுக மட்டுமல்ல திமுகவும் வேண்டாம் – விஜயகாந்த் அதிரடி!   

548
0
SHARE
Ad

vijayakanthமயிலாடுதுறை –  விஜயகாந்த் எப்படியும் திமுகவுடன் கூட்டணி வைத்துவிடுவார் என பரவலாக அரசியல் விமர்சகர்கள் பேசி வரும் நிலையில், அவர்களுக்கு மட்டுமல்லாமல் திமுகவிற்கும் அதிர்ச்சி கொடுப்பது போல், முக்கிய அறிவிப்பு ஒன்றை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே கிராமம் ஒன்றில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய விஜயகாந்த், “சட்டசபையில் மக்கள் பிரச்சனை பற்றி பேச எழுந்தால், எங்களை பேச விடுவதில்லை. எதற்கெடுத்தாலும் என் மீது வழக்கு போடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது.”

“அதேபோல், அதிமுக, திமுகவுடன் ஒருபோதும் தேர்தல் கூட்டணி வைக்க மாட்டேன்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது அறிந்த ஒன்றுதான் என்றாலும், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளது திமுக வட்டாரத்தை யோசிக்க வைத்துள்ளது.