புது டெல்லி – இந்தியா வந்திருந்த மார்க் சக்கர்பெர்க்கிடம் பேஸ்புக்கின் எதிர்காலம், இனி வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம் என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கான பதில்களையும் அவர் மிகத் தெளிவாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னை மிகவும் கவர்ந்த கேள்வி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “இந்தியாவின் மீது மட்டும் ஏன் உங்களுக்கு இவ்வளவு கரிசனம்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. எங்களைப் பொறுத்துவரை, இந்தியாவில் பேஸ்புக்கை பயன்படுத்தும் 130 மில்லியன் மக்களுக்கு சேவையாற்றும் பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதேபோல் ஏறக்குறைய 1 பில்லியன் மக்களுக்கு இணையம் இன்னும் சென்றடையவில்லை.”
“ஆய்வுகளின் மூலம் நமக்கு தெரியவருவது என்னவென்றால் இணையம் பெறும் 10 பேரில் ஒருவர், வறுமையில் இருந்து விடுபடுகிறார் என்பதாகும். அதனால், இந்த 1 பில்லியன் மக்களை இணையத்தின் மூலம் இணைப்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே நாங்கள் செய்யும் சிறப்பான ஒன்றாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.