Home Featured கலையுலகம் மகனின் இழப்பு: டுவிட்டரில் நடிகர் விவேக் உருக்கம்!

மகனின் இழப்பு: டுவிட்டரில் நடிகர் விவேக் உருக்கம்!

528
0
SHARE
Ad

vivek tweetசென்னை – உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விவேக்கின் மகன் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், நேற்று அவரின் இறுதிச் சடங்கு விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் நடந்தது.

திரை உலக முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, விவேக்கிற்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் இன்று விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், “மீடியா வெளிச்சம் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, கண்ணியம் காத்த அனைத்து ஊடகங்களுக்கும் என் நன்றிகள். என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி! ” என்று பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரிலும் சினிமா ரசிகர்கள் பலர் விவேக்கிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.