Home Slider கருணாநிதி, பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு – எதிர்பார்த்தது நிகழுமா?

கருணாநிதி, பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு – எதிர்பார்த்தது நிகழுமா?

518
0
SHARE
Ad

ponசென்னை – கடந்த சில நாட்களுக்கு முன்னர், திமுகவின் பார்வை பா.ஜ க மீது திரும்பி உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்த செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசியிருக்கிறார்.

ஒருவேளை கூட்டணிக்கான முதல் படியாக இருக்குமோ என பல்வறு ஆருடங்கள் எழுந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  பொன்.ராதாகிருஷ்ணன், கருணாநிதியுடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், தன்னுடைய இல்லத் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்க வந்தேன் என்றும் தெரிவித்தார்.

ஸ்டாலினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, அருள்நிதியின் திருமணத்தை மையமாக வைத்து தமிழ அரசியல் சூழலை மாற்ற நினைத்தது நினைவிருக்கலாம். ஒருவேளை பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டாலினை பின்பற்றுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.