Home Featured நாடு டோனி புவாவுக்குப் பதிலாக புதிய பேச்சாளரை அறிவிப்போம் – பக்காத்தான் ஹராப்பான்

டோனி புவாவுக்குப் பதிலாக புதிய பேச்சாளரை அறிவிப்போம் – பக்காத்தான் ஹராப்பான்

985
0
SHARE
Ad

Arul-Kanda-Tony-Puaகோலாலம்பூர்- 1எம்டிபி குறித்து அருள் கந்தாவுடன் நேரடி விவாதத்தில் பங்குபெற டோனி புவாவுக்குப் பதிலாக வேறொரு பேச்சாளரை அறிவிக்க இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.

இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்புவதில் இருந்து ஆர்டிஎம் பின்வாங்கியுள்ள போதிலும், பேச்சாளரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை நீடிக்கும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா நேற்று புதன்கிழமை கூறினார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின்போது புதிய பேச்சாளர் யார் என்பதை அறிவிக்கப் போவதாகவும், நேரடி விவாதம் எங்கு, எந்த வகையில் நடத்தப்படும் என்பது குறித்து இருதரப்புப் பிரதிநிதிகள் கலந்து பேசுவார்கள் என்றும் பக்காத்தான் ஹராப்பான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்ப ஆர்டிஎம்மால் மட்டுமே இயலும் என்பது கிடையாது. வேறு வாய்ப்புகளும் இடங்களும் உள்ளன. அவை குறித்தும் பரிசீலிப்போம். நேரடி விவாதத்தில் பங்கேற்கும் பேச்சாளர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், புதன்கிழமை இரவு பக்காத்தான் ஹராப்பானின் தலைமைக் கவுன்சிலின் அனுமதி பெறப்படும். அதன் பிறகு அவரது பெயரை அறிவிப்போம்” என்றார் சைஃபுதின் அப்துல்லா.

முன்னதாக 1எம்டிபி விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பப் போவதில்லை என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“வேறு பேச்சாளரை தேர்வு செய்து விவாதத்தை நடத்துவது எதிர்க்கட்சிகளின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் விவாதம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாது” என்று சாலே தெரிவித்துள்ளார்.