Home Featured தொழில் நுட்பம் தாயகம் வருகிறார் மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா!

தாயகம் வருகிறார் மைக்ரோசாப்ட்டின் சத்யா நாதெல்லா!

670
0
SHARE
Ad

satya_மும்பை – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதல்லா இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் வருகையைத் தொடர்ந்து, அடுத்த மிக முக்கியத் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் தலைவரும் இந்தியா வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த முறை இந்தியா வந்தபோது பிரதமர் மோடியை சந்தித்த நாதெல்லா, இம்முறை மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆக்சிஸ் வங்கி தலைவர் ஷிகா சர்மா, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா ஆகியோரை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், உலகின் பல்வேறு இடங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், நோக்கம், புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றிற்காக ‘ஃபியூட்சர் அன்லீஸ்டு’ (Future Unleashed)  என்ற கருத்தரங்கை அந்நிறுவனம் நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

இந்த கருத்தரங்கில் உரையாற்றுவதற்காகவும் நாதல்லா இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது.