Home Featured இந்தியா உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் மோடிக்கு 9-வது இடம்!

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் மோடிக்கு 9-வது இடம்!

526
0
SHARE
Ad

modi12புதுடெல்லி – இந்த ஆண்டிற்கான உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 9-ம் இடம் கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் செல்வாக்குமிக்க 100 தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றது.

அந்த வகையில், 2015-ம் ஆண்டிற்கான பட்டிலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தில் உள்ளார்.

#TamilSchoolmychoice

2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உள்ளனர். கடந்த வருடம் ஒபாமா 2வது இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது ஒரு இடம் சறுக்கியுள்ளார்.

4-வது இடத்தை போப் பிரான்சிஸ் பிடித்துள்ளார். 5-வது இடம் சீன அதிபர் ஜீ ஜிங்பிங்கிற்கு கிடைத்துள்ளது. 6, 7 மற்றும் 8வது இடங்கள் முறையே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜேனட் யெல்லன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் பிடித்துள்ளனர்.

இப்பட்டியலில் கடந்த வருடம் 15-வது இடம் பெற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த வருடம் 6 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடம் பெற்றுள்ளார். மோடி பற்றி குறிப்பிட்டுள்ள போர்ப்ஸ் பத்திரிகை, தனது முதலாமாண்டு பதவிக்காலத்தில் 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ள மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜீ ஜிங்பிங் சந்திப்பு மற்றும் சிலிக்கான் வேலிக்கு சென்று வந்தபின், தனது நிலையை உயர்த்திக் கொண்டு, மக்களின் மனதை அதிகம் கவர்ந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

மோடிக்கு அடுத்த இடமான 10வது இடத்தில் கூகுள் அதிபர் லேரி பேஜ் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.