Home Featured உலகம் தீவிரவாதத்தின் உச்சம்: 200 குழந்தைகளை வரிசையாக படுகொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்!

தீவிரவாதத்தின் உச்சம்: 200 குழந்தைகளை வரிசையாக படுகொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்!

502
0
SHARE
Ad

SYRIA oneசனா – உலகின் அதிபயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருத்தப்படும் ஐஎஸ்ஐஎஸ்-ன் கொலை பாதக செயல்கள் பற்றி பல செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், ஏமன் நாட்டில் நட்பு ஊடகம் ஒன்றில் சமீபத்தில் வெளியாகி உள்ள காணொளி, அந்த இயக்கத்தினர் மனிதர்கள் தானா? அல்லது மனித மிருகங்களா? என்று கேட்கவைக்கும் அளவிற்கு மிகக் கொடூரமானதாக உள்ளது.

சிரியாவில் வலுவாகக் காலூன்றி உள்ள அந்த இயக்கத்தினர், சமீபத்தில் தங்களிடம் பிணைக்கைதிகளாக இருந்த சிரியாவை சேர்ந்த 200 குழந்தைகளை ஒரே நேரத்தில் சுட்டுக் கொன்று அதனை காணொளியாக்கி உள்ளனர். அந்த காணொளி தான் தற்போது வெளியாகி உள்ளது.

ஐஎஸ் இயக்கத்தினரின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் அங்கு தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.