பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்தத் தொடர் தாக்குதலில் இதுவரை 43 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியிடப்பட்ட நிலையில் மலேசிய நேரப்படி காலை 8.10 மணியளவில் வெளியிடப்பட்ட தொலைக்காட்சித் தகவல்களின்படி பாரிஸ் கொன்சர்ட் ஹால் (Paris Concert Hall) பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் நூறு பேர் பலியாகி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்குத் தாங்கள்தான் காரணம் என்று கூறிக் கொண்ட பயங்கரவாத இயக்கமாக ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதல் வெற்றி குறித்து நட்பு ஊடகங்களில் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதோடு, அந்த நாட்டில் அவசர நிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.
(செய்திகள் தொடரும்)
-செல்லியல் தொகுப்பு