Home Featured உலகம் இலண்டன் வெம்ப்ளி அரங்கில் மோடி உரை கேட்க பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன், 60 ஆயிரம் பேர் குழுமியுள்ளனர்!

இலண்டன் வெம்ப்ளி அரங்கில் மோடி உரை கேட்க பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளுடன், 60 ஆயிரம் பேர் குழுமியுள்ளனர்!

813
0
SHARE
Ad

Narendra Modi-UK visit-Dance programmeஇலண்டன் – பிரிட்டன் வருகை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மற்ற நாடுகளைப் போலவே, இங்கேயும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றுகின்றார்.

இன்று இரவு இந்திய நேரப்படி 10.00 மணிக்கு இலண்டன் வெம்ப்ளி அரங்கில்  உரையாற்றவிருக்கும் மோடியுடன் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும் கலந்து கொள்கின்றார்.

மோடி உரைக்கு முன்னதாக, ஆடல், பாடல்களுடன் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

மோடியின் உரையைக் கேட்க சுமார் 60 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் தற்போது வெம்ப்ளி அரங்கில் குழுமியுள்ளனர்.

-செல்லியல் தொகுப்பு