பாரிஸ் – பாரிசில் நேற்று இரவு தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 153 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், அந்நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் எல்லைகளிலும் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாரிஸ் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் மோடி
“பாரிசில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்த செய்திகள் பெரும் கவலை அளிக்கின்றன. பலியானவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திப்போம். இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் பிரான்ஸ் மக்களுடன் ஒன்றிணைந்து இருப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.
“அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. இந்த தாக்குதல் மனிதநேயத்தின் மீதும், உலகளாவிய மதிப்புகள் மீதும் நடத்தப்பட்ட ஒன்று. பிரான்சிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
-செல்லியல் தொகுப்பு