Home Featured உலகம் “இனி தீவிரவாதிகள் மீது எங்கள் தாக்குதல் கருணையற்றதாக இருக்கும்” – பிரான்ஸ் அதிபர்     

“இனி தீவிரவாதிகள் மீது எங்கள் தாக்குதல் கருணையற்றதாக இருக்கும்” – பிரான்ஸ் அதிபர்     

466
0
SHARE
Ad

paris preபாரிஸ் – பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் ஹாலன்டே ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல் முன்பை விட கருணையற்றதாக இருக்கும். இந்த காட்டுமிராண்டித் தனமான செயல்களைச் செய்தவர்கள் அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.”

“இத்தகைய துயரமான சூழலிலும் பிரான்ஸ் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பணிந்து விடாது. நாங்கள் ஒற்றுமையுடன் இருப்போம். நாங்கள் படும் வேதனைக்கு பதிலடி கொடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ், ஐஎஸ்ஐஎஸ் ஆளுமை செலுத்தி வரும் சிரியாவின் சில பகுதிகளில் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு தீவிரவாதிகளின் பொருளாதார மண்டலங்களை தங்கள் விமானப் படை கொண்டு பிரான்ஸ் அழித்ததால், தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.