Home Featured உலகம் பிரசல்ஸ் மரண எண்ணிக்கை 26 ஆக உயர்வு! 130 பேர் காயம்!

பிரசல்ஸ் மரண எண்ணிக்கை 26 ஆக உயர்வு! 130 பேர் காயம்!

996
0
SHARE
Ad

At least 13 dead in Brussels after airport, subway blastsபிரசல்ஸ் – பெல்ஜயம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்திலும், மெட்ரோ இரயில் நிலையம் ஒன்றிலும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 26 ஆக உயர்ந்துள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக இருக்கும் என சிஎன்என் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் கணிக்கப்படுகின்றது.

Salah Abdeslam, suspect of Paris terror attacksபாரிஸ் தாக்குதலை நடத்தியவன் என சந்தேகிக்கப்படும் சாலா அப்டிஸ்லாம் (படம்), சில நாட்களுக்கு முன்னால், கடந்த மார்ச் 18ஆம் தேதி பெல்ஜியம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவன் சில பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தான் என பெல்ஜியம் காவல் துறையினர் அறிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

ஆனால், அவன் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே, இரட்டைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது, பெல்ஜியத்தியத்தையும், ஐரோப்பிய, உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரசல்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியான மொலன்பீக் என்ற பகுதியில், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை மார்ச் 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டபோது, சாலா அப்டிஸ்லாம் காயமடைந்ததோடு, கைதும் செய்யப்பட்டான்.