Home Featured நாடு எம்எச்370: தென்னாப்பிரிக்காவில் விமானத்தின் இயந்திர பாகம் கண்டுபிடிப்பு!

எம்எச்370: தென்னாப்பிரிக்காவில் விமானத்தின் இயந்திர பாகம் கண்டுபிடிப்பு!

920
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர் – தென்னாப்பிரிக்காவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் விமானத்தின் இயந்திர (எஞ்சின்) பாகம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவித்துள்ளார்.

மூசல்பே என்ற இடத்தில் கண்டறியப்பட்டுள்ள அந்தப் பாகம் எம்எச்370 விமானத்தின் பாகம் தானா? என்பதை அடுத்தடுத்த ஆய்வுகள் மூலமாகத் தான் உறுதிபடுத்த முடியும் என்றும் லியாவ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தென்னாப்பிரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் உள்நாட்டுப் போக்குவரத்துத்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் லியாவ் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice