Home Featured உலகம் பாரிஸ் பயங்கரம்: காதலி முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் காதலன் பலியான சம்பவம்!

பாரிஸ் பயங்கரம்: காதலி முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் காதலன் பலியான சம்பவம்!

785
0
SHARE
Ad

paris-victim-Yanni_3502186bபாரிஸ் – தீவிரவாதத்தின் முதல் பலி மனித நேயம் தான். ஆயிரம் காரணங்களைக் கூறி கொண்டு தீவிரவாதிகள் தங்களது மனித நேயத்தைக் கொன்று அப்பாவிகளை அழித்தாலும், மக்களுக்குள் இருக்கும் மனித நேயத்தை அழிக்க முடியவில்லை. அதற்கான உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலிலும் கூட அத்தகைய உருக வைக்கும் சம்பவங்கள் நடந்தன.

தனது குழந்தைக்காக ஒரு தாய் உயிர் தியாகம் செய்த சம்பவம் பலரையும் கலங்கச் செய்த நிலையில், தனது காதலியை காப்பாற்ற காதலன் உயிர் துறந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.

விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த யானிக் மின்லே (படம்) என்பவர் வார இறுதியை கொண்டாட, கடந்த 13-ம் தேதி தனது காதலியுடன் பாரிசின் பாட்கேளன் இசை அரங்கத்திற்கு சென்றுள்ளார். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீர் என கேட்ட துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் அதனைத் தொடர்ந்து கூட்டம் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதையும் கவனித்த யானிக், நடக்கும் விபரீதங்களை அறிந்து கொள்ளும் முன்னரே தீவிரவாதி ஒருவனின் துப்பாக்கி முனை தனது காதலியை குறி வைப்பதை கண்டு கொண்டார்.

#TamilSchoolmychoice

தீவிரவாதி சுட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் காதலியை தாக்கும் முன், யானிக் தனது காதலியின் முன் வந்து நிற்க, அந்த தோட்டாக்கள் அவரின் தலையை துளைத்துக் கொண்டு சென்று விட்டன.

என்ன நடந்தது என யானிக்கின் காதலி உணர்வதற்குள், சரிந்து விழுந்த யானிக் சம்பவ இடைதிலேயே பலியானார். தாங்கள் பரிமாறிக் கொண்ட முத்தத்தின் ஈரம் காய்வதற்குள் தன் கண் முன்னே காதலன், தனக்காக பலியான சம்பவம் அந்த பெண்ணை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது. அதிலிருந்து இன்னும் மீண்டு வராத அந்த பெண், சமீபத்தில் யானிக் குறித்து வெளியிட்ட தகவல் மூலம், அவரின் தியாகம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.