வாஷிங்டன் – பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் அனைத்து நாடுகளிலும் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது அமெரிக்கா.
அதேநேரத்தில், அதிகமானோர் கூடும் இடங்களிலும், விழாக் காலங்களிலும் கவனம் தேவை என அமெரிக்கர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த நவம்பர் 13-ம் தேதி பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய பெல்ஜியத்தைச் சேர்ந்த சாலா அப்டேஸ்லாம் என்பவனைக் கண்டுபிடிக்க பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் தீவிர தேடுதல் வேட்டை முடக்கிவிடப்பட்டுள்ளது.
“தற்போதைய தகவல் கூறுவது என்னவென்றால் ஐஎஸ்ஐஎல், அல்கொய்தா, போக்கோ ஹராம் மற்றும் மற்ற தீவிரவாத அமைப்புகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன” என்று மாநிலப் பயண ஆலோசனைத்துறை அறிவித்துள்ளது.