Home Slider ஜனவரியில் ஜெயாவின் வழக்கை தினமும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜனவரியில் ஜெயாவின் வழக்கை தினமும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

484
0
SHARE
Ad

jayalalithaaபுதுடெல்லி – ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி மாதம் 8-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் அவரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக சார்பில் பொதுச் செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய தகவல்களை தொகுப்பாக வழங்குமாறு கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பிற்கு உத்தரவிட்டனர்.

#TamilSchoolmychoice

மேலும், வழக்கை தினமும் விசாரிப்பதற்கான தேதி ஜனவரி மாதம் 8-ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.