Home Featured உலகம் பாரிசை விடக் கொடூரமான தாக்குதலுக்குத் தயாராகுங்கள் – பிரிட்டனுக்கு ஐஎஸ் எச்சரிக்கை!

பாரிசை விடக் கொடூரமான தாக்குதலுக்குத் தயாராகுங்கள் – பிரிட்டனுக்கு ஐஎஸ் எச்சரிக்கை!

773
0
SHARE
Ad

Who is Isis?லண்டன் – பாரிஸ் தாக்குதலை விட கொடூரமான தாக்குதலுக்குத் தயாராக இருங்கள் என உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பிரிட்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக போர் என பிரிட்டன் பிரகடனப்படுத்தியுள்ளதால், இந்தத் தாக்குதல் என ஐஎஸ் அறிவித்துள்ளது.

அதோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆளில்லா விமானங்கள் மூலமாக ஐஎஸ் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அண்மையில், சிரியாவின் வடக்கில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஜிகாதி ஜான் என்ற ஐஎஸ் போராளி கொல்லப்பட்டான்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சிரியாவின் ஐஎஸ் படைகளுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்த கடந்த இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, ஐஎஸ் அமைப்பு மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

இதனிடையே, தாங்கள் நடத்தவுள்ள கொடூரத் தாக்குதலின் தீவிரம் குறித்து விளக்கியுள்ள ஐஎஸ், “அந்தத் தாக்குதல் குழந்தைகளின் தலைமுடியை வெள்ளையாக்கும் வகையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.