இதனால் கோவையில் கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 6000 காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கடுமையான 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை மதியம் 2.30 மணியளவில் கோவை விமான நிலையத்திற்கு வருகை புரியும் மோடி, பின்னர் காமராஜ் சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையைத் திறந்து வைப்பார். அதன் பின்னர் கொடிசியா கிரவுண்ட் என்ற இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவார்.
அதன் பின்னர், அவினாசி சாலையில் உள்ள சர்கியூட் ஹவுஸ் என்ற இடத்தில் சற்று ஓய்வெடுத்த பின்னர், அங்கிருந்து புறப்படுவார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Comments