டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாரஷ்டிரா நிர்மாண் சேவா தலைவர் ராஜ்தாக்கரே என இந்த பட்டியல் நீண்டு வரும் நிலையில், கமல்ஹாசன் சமீபத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார். கெஜ்ரிவால், ராஜ்தாக்கரே ஆகியோரை கமல் சந்தித்ததற்கான காரணங்கள் இதுவரை வெளிவராமல் இருப்பது போல் சந்திரபாபுவுடனான சந்திப்பிற்கும் எத்தகைய காரணங்களும் கூறப்படவில்லை.
எனினும், இதுகுறித்து கமல் வட்டாரங்கள் கூறுகையில், அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீகட்டி ராஜ்ஜியத்தின் பிரத்யேக காட்சியை பார்க்க வருமாறு அழைப்பு விடுக்கவே, கமல் சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாகத் தெரிவித்துள்ளனர்.