Home Featured உலகம் ஐஎஸ் முகாம்கள் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்! முக்கியத் தீவிரவாதி ஜிகாதி ஜான் பலி!

ஐஎஸ் முகாம்கள் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்! முக்கியத் தீவிரவாதி ஜிகாதி ஜான் பலி!

566
0
SHARE
Ad

francejetsபாரிஸ் – கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிஸ் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கில், சிரியாவின் தலைநகர் ராகாவில் அமைந்திருக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மற்று பயிற்சி மையங்கள் மீதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரஞ்சு விமானப் படைகள் குண்டுமழை பொழிந்தன.

முகாம்களைக் குறி வைத்து சுமார் 12 போர் விமானங்கள் 20 குண்டுகளை வீசின – வெடிக்கச் செய்தன.

பிரான்ஸ் அமெரிக்காவுடன் இணைந்து நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் (26) உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஸ்டீவன் சாட்லாஃப், ஜேம்ஸ் ஃபோலி, அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர் அப்துல் ரஹ்மான் காசிக், பிரிட்டன் தொண்டு நிறுவன ஊழியர்கள் டேவிட் ஹேன்ஸ், ஆலன் ஹென்னிங், ஜப்பானிய பத்திரிகையாளர் கென்ஜி கோடோ உள்ளிட்டவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் காணொளியில் இருந்தவர் தான் இந்த ஜிகாதி ஜான் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் பீட்டர் குக் தெரிவித்துள்ளார்.