Home Slider தற்கொலைப்படை தீவிரவாதி பிரான்ஸ் அதிபரை படுகொலை செய்ய வந்தானா?

தற்கொலைப்படை தீவிரவாதி பிரான்ஸ் அதிபரை படுகொலை செய்ய வந்தானா?

569
0
SHARE
Ad

franceபாரிஸ் – கடந்த சில வருடங்களில் உலகை அச்சுறுத்திய பயங்கரவாத தாக்குதல்களில், சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடத்தப்பட்ட தாக்குதலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே (படம்) பார்வையாளராக கலந்து கொண்ட கால்பந்து போட்டியில் தற்கொலைப்படைத் தீவிரவாதி ஒருவனும் நுழைய முயன்றது தற்போது தெரிய வந்துள்ளது.

பாரிஸ் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று  ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில், ஜெர்மனி- பிரான்ஸ் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் உட்பட 80 ஆயிரம் மக்கள் திரண்டிருந்த அந்த மைதானத்தை தான் தீவிரவாதிகள் முதலில் குறி வைத்துள்ளனர். பெரிய அளவிலான உயிர் பலியை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் இலக்காக இருந்துள்ளது.

அந்த திட்டத்தின் படியே போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், உடல் முழுக்கு வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு மைதானத்திற்குள் தீவிரவாதி ஒருவன் நுழைய முயன்றுள்ளான். எனினும், தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், சோதனையில் அந்த தீவிரவாதி சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

பிரான்ஸ் நேரப்படி இரவு 9.20 மணியளவில் ஸ்டேட் டி பிரான்ஸ்  மைதானத்திற்கு வெளியேதான் முதல் மனித வெடிகுண்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் முதல் மனித வெடிகுண்டு வெடித்தில், 3 பேர் இறந்துள்ளனர்.இந்த வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் மைதானத்திற்குள்ளும் கேட்டுள்ளது. எனினும், அப்போது அது பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மைதானத்திற்குள் இருக்கும் அதிபருக்கு தொலைபேசி முலம்  தகவல் அளிக்கப்படுகிறது. இந்த காட்சியும் தற்போது வெளியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தகவல் வர, அதிபர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அதன் பிறகு, அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக தீவிரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல்கள் முலம், தீவிரவாதிகளின் முதல் குறி, அதிபர் பங்கேற்ற கால்பந்து போட்டி தான் என்று தெரிய வந்துள்ளது.