Home Featured நாடு மலேசியத் தலைவர்களைக் குறிவைத்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்: ஹிஷாமுடின்

மலேசியத் தலைவர்களைக் குறிவைத்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்: ஹிஷாமுடின்

607
0
SHARE
Ad

Hishammuddinகுளுவாங் – ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் கொலைப பட்டியலில் மலேசியத் தலைவர்கள் பலர் இடம்பெற்றுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் (படம்) தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரபலங்கள் பலருக்கு ஐ.எஸ்.ஐஸ் இயக்கத்தினர் குறி வைத்திருப்பது தொடர்பான அறிக்கை தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நம் நாட்டிலுள்ள பல தலைவர்களுக்கு குறிவைத்துள்ளது. அவர்கள் (ஐ.எஸ்.ஐஸ்) குறி வைத்துள்ளவர்களில் நானும் ஒருவன். ஆனால் இதற்காக நாம் பயந்துவிடப் போவதில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான நமது செயல்பாடு நின்றுவிடாது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், நமது நாடு அமைந்துள்ள வட்டாரத்திலும் தீவிரவாதத்துக்கு எதிரான நமது செயல்பாடு தொடரும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

“கடந்த மார்ச் மாதம் லங்காவியில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டிற்கு முன்பே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் இந்த மிரட்டல் குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாதத்துக்கு எதிராக ஆசியான் அமைப்பில் உள்ள பத்து நாடுகளும் இணைந்து செயல்படுவது என இணக்கம் காணப்பட்டது” என்று ஹிஷாமுடின் கூறினார்.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை தாமான் ஸ்ரீ லாம்பாக்கில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின்போதே அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.