Home Featured உலகம் இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 8 பேர் கைது!

இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 8 பேர் கைது!

502
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512இஸ்தான்புல் – பாரிஸ் நகரத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளையும், அந்த இயக்கத்தோடு தொடர்புடையவர்களையும் தேடும் அனைத்துலக முயற்சிகள் தொடரப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து இன்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 8 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மொரோக்கோ நாட்டிலிருந்து அவர்கள் இஸ்தான்புல் வந்தடைந்தார்கள் என்றும்,  ஜெர்மனிக்கு செல்லப்போகின்ற அகதிகள் போன்று அவர்கள் நடந்து கொண்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அவர்களின் ஒருவனிடம் துருக்கியிலிருந்து ஜெர்மனி செல்வதற்கான வரைபடம் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.