Home Featured உலகம் பாரிஸ்: மகனைக் காப்பாற்ற தோட்டாக்களைத் தாங்கி உயிர்விட்ட தாய்!

பாரிஸ்: மகனைக் காப்பாற்ற தோட்டாக்களைத் தாங்கி உயிர்விட்ட தாய்!

655
0
SHARE
Ad

paris12பாரிஸ் – பாரிசில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டக்லான் இசை அரங்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலின் போது தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தாய் ஒருவர் தனது உடலை கேடயமாக்கி தோட்டாக்களைத் தாங்கி உயிர்விட்ட சம்பவம் குறித்த தகவல்கள் நமக்கு கண்ணீர் வரவழைக்கின்றன.

லூயிஸ் என்ற 5-வயது சிறுவன் தனது தாய் எல்சா டெல்ப்லேசுடன் (35) பட்டக்லான் அரங்கிற்கு வந்துள்ளான். அந்த சமயத்தில் தான் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுடத் தொடங்கியதும் கலவரம் அடைந்த எல்சா, தனது குழந்தையை மார்போடு அனைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி உள்ளார். எனினும், தோட்டாக்கள் அவரைத் துளைத்தெடுக்க, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த அதிரடிப் படையினரும், மீட்புக் குழுவினரும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தை லூயிஸ் தற்போது நலமுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது உடன் இருந்த லூயிசின் பாட்டி மூலம் வெளிஉலகிற்கு பாசத் தாயின் தியாகம் தெரிய வந்துள்ளது.