Home 13வது பொதுத் தேர்தல் பச்சை பேரணி போராட்டவாதி ஓங் தெக் ஜசெக சின்னத்தில் பெந்தோங்கில் போட்டி

பச்சை பேரணி போராட்டவாதி ஓங் தெக் ஜசெக சின்னத்தில் பெந்தோங்கில் போட்டி

776
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், மார்ச்13- எதிர்வரும் பொது  தேர்தலில் பகாங், பெந்தோங் நாடாளுமன்றத்தில் பச்சை பேரணி தலைவர் ஓங் தெக் போட்டியிடுவார் என ஜசெக கட்சியின் பொதுச் செயலாளர் லிம் குவான் எங் (படம்)  உறுதிப்படுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் பெந்தோங் நாடாளுமன்ற நடப்பு உறுப்பினராக இருந்து வருகிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் லியோ வேட்பாளர் ஜி.வெள்ளைச்சாமியை 12, 540 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மேலும், குவாந்தான், கோப்பேங் லைனாஸ் தொழிற்சாலைக்கு எதிராக ஓங் குரல் கொடுத்தார். சுற்றுசூழலை வெகுவாக பாதிக்கும் அந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்படக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்.

இதனைத்  தொடர்ந்து, பினாங்கு முதலைமச்சராகிய லிம் குவான் எங் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில்  ஜசெக சின்னத்தில் ஓங் தெக் போட்டியிடுவார் என செய்தியாளர்களிடம் கூறினார்.

மசீச கட்சியின் துணைத் தலைவருமான சுகாதார அமைச்சர் லியோ தியாங் லாங் இதன்மூலம் கடுமையான போட்டியை ஜ.செ.க கட்சியிடமிருந்து எதிர்நோக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.