Home Slider ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சைபர் போர் – உருவாகும் புதிய இயக்கம்!

ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக சைபர் போர் – உருவாகும் புதிய இயக்கம்!

561
0
SHARE
Ad

isநியூ யார்க் – நாளுக்கு நாள் மிருகத்தனமான செயல்களால் உலகை அதிர்ச்சியுற வைத்துள்ள ஐஎஸ் இயக்கத்தினர், தங்கள் கொள்கைகளை பரப்புவதற்காக பெரிதும் நம்பி இருப்பது நட்பு ஊடகங்களைத் தான். பேஸ்புக், டுவிட்டர் என தங்கள் செயல்பாடுகளை பதிவு செய்து இளைஞர்கள் பலரை மூளைச் சலவை செய்து தங்கள் வசம் இழுக்கின்றனர். இவர்களால் கவரப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை லட்சங்களை நெருங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பாரிஸ் நகரில் அவர்கள் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல் பல்வேறு தரப்பினரையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், ஒரு இயக்கத்தினர் மட்டும் படுரகசியமாக ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் உலக நாடுகளின் அதிகாரப்பூர்வமான அமைப்பினராக இருக்குமோ என்றால் இல்லை என்று அமெரிக்காவே தெரிவிக்கிறது. இவர்களும் குற்றவாளிகள் தான். தொழில்நுட்ப திருடர்களான இந்த இயக்கத்தினர், சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் படி, கடந்த ஜனவரி மாதம் முதல் ஐஎஸ் இயக்கத்தின் நட்பு ஊடகங்களை முடக்கி வருவதாகவும். 1000-திற்கும் மேற்பட்ட ஐஎஸ் இயக்க டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

‘கோஸ்ட் செக்யூரிட்டி குரூப்’ (Ghost Security Group) என்ற அந்த இயக்கத்தினர் தங்களைப் பற்றிய எவ்வித அடையாளங்களையும் வெளியிட மறுக்கின்றனர். தங்களது முழுநோக்கம் ஐஎஸ் இயக்கத்தின் தொழில்நுட்ப செயல்பாடுகளை முடக்குவது தான் என்றும் கூறியுள்ளனர்.

எனினும், இவர்கள் குறித்து அமெரிக்கா பதில் அளிக்க மறுத்துவிட்டது.

ஒரு இயக்கத்தை அழிக்க உருவான புதிய இயக்கம் தான் ஐஎஸ்ஐஎஸ். அதனால், எதிர்காலத்தில் இவர்களும் உலகை அச்சுறுத்தாமல் இருக்க உலக நாடுகள் இவர்களை கவனமாக கையாள வேண்டியது அவசியமாகும்.