இளையோர் மேம்பாடு மற்றும் நவீன விவசாய தொழில் நுட்ப மேம்பாட்டு பரிமாற்றம் குறித்து மேலும் விரிவாக அறிந்து கொள்ள அவரது இந்தப் பயணம் அமைந்திருக்கின்றது.
எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி வரையில் சரவணனின் இந்தப் பயணம் தொடரும். ஆறு நாட்களுக்கான பயணத்தின்போது, சரவணன், உயர்தர விவசாய தொழில் நுட்பப் பட்டறைகளிலும், கலந்துரையாடல்களிலும் கலந்துக் கொள்வார்.
இந்தப் பயணத்தின் வாயிலாக விவசாயத் துறையில் உயரிய தொழில் நுட்ப அடைவு நிலையைக் கொண்டிருக்கும் நெதர்லாந்து நாட்டின் விவசாய தொழில் நுட்பத்தை நமது நாட்டிற்கு நன்மை பயக்கும் விதத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து சரவணன் விளக்கம் பெறுவார்.
உணவுப் பள்ளத்தாக்கு மையத்துக்கு வருகை தந்து, விளக்கமளிப்பிலும் கலந்து கொண்ட, சரவணனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது.