Home Featured உலகம் ரஷ்ய விமானப் பேரிடர்: 224 பேரின் உயிரைக் குடித்தது இந்த வெடிகுண்டு தான்!

ரஷ்ய விமானப் பேரிடர்: 224 பேரின் உயிரைக் குடித்தது இந்த வெடிகுண்டு தான்!

528
0
SHARE
Ad

bomb19கைரோ – கடந்த மாதம் எகிப்தில் ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட நாட்டு வெடிகுண்டு ஒன்றின் படத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ இதழ் நேற்று வெளியிட்டுள்ளது.

குளிர்பான டின் ஒன்று, டிடோனேட்டர் மற்றும் சுவிட்ச் ஒன்று இம்மூன்று பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வெடிகுண்டு தான் அவ்வளவு பெரிய பயணிகள் விமானத்தை வீழ்த்தியதாக நம்பப்படுகின்றது.

“கலிபா முஸ்லிம்கள் மீது கோழைத்தனமாக குண்டு வீசும் கிழக்கு மற்றும் மேற்கே பிரிந்து கிடக்கும் போராளிகள், தாங்கள் விமானத்தில் செல்வது பாதுகாப்பு என்று எண்ணுகிறார்கள்”

#TamilSchoolmychoice

“இந்த பழிவாங்கல் தாங்கள் விமானத்தில் இருப்பது பாதுகாப்பு எண்ணுபவர்களுக்காக நடத்தப்பட்டது” என்று டாபிக் என்ற அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், முஜாஹுதின் அமைப்பினரால் கைப்பற்றப்பட்ட இறந்த ரஷ்ய நாட்டவர்களின் கடப்பிதழ்களின் புகைப்படங்களையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

எனினும், அந்த இதழில் வெளியிடப்பட்ட அந்தப் புகைப்படங்களின் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஷார்ம் அல் ஷேக் விமான நிலையத்தில் தங்களுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விமானத்தில் வெடிகுண்டை கடத்திவிட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.