இந்நிலையில் அப்படம் மாசிடோனியாவின் சினிடேய்ஸ் உலகத்திரைப்பட விழாவில் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்காக அப்படத்தில் பணியாற்றிய நடிகர் ஷோபா சக்தி, தமிழ் நடிகை காளீஸ்வரி உள்ளிட்ட பலர் மாசிடோனியா சென்றனர். அந்நாட்டின் தலைநகரான ஸ்கோப்ஜெ சென்ற அக்குழுவினரில், ஷோபா சக்திக்கு மட்டும் அனுமதி வழங்க அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அதற்கு காரணம் மாசிடோனியா சட்டத்திட்டப்படி பிரான்ஸ் நாட்டு குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விசா இன்றி அனுமதிக்கப்படுவர். ஷோபா சக்தி, பிரான்சில் 25 ஆண்டுகளாக வசித்தாலும் அவருக்கு அகதிகளுக்கான கடவுச்சீட்டு மட்டுமே இருப்பதால் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற்றினர்.