Home Featured நாடு ஒபாமா மலேசியா வருகை: கோலாலம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஒபாமா மலேசியா வருகை: கோலாலம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

536
0
SHARE
Ad

obama_10கோலாலம்பூர் – ஒபாமா வருகையை முன்னிட்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பல முக்கிய இடங்களில் இன்று இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கடும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலி அபு பக்கர் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில், “மலேசியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனினும், அது உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், அண்மையில், பிரான்ஸ், எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து மலேசியாவில் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள ஒபாமா இன்று மலேசியா வருகை புரியவுள்ளார். ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, ரஷ்யா, தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் நாளை சனிக்கிழமை அம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் சுமார் 2,000 இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.