Home Featured உலகம் “எல்லையில் அத்துமீறியதால் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” – துருக்கி அறிவிப்பு!

“எல்லையில் அத்துமீறியதால் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்” – துருக்கி அறிவிப்பு!

1285
0
SHARE
Ad

151124093549-russia-jet-syria-crash-1-large-169இஸ்தான்புல் – சிரியா எல்லைக்கு அருகேயுள்ள துருக்கி ஆகாய எல்லைப் பகுதியில் அனுமதியின்றிப் பறந்ததோடு, எச்சரிக்கைக்கும் செவி சாய்க்காததால், தாங்கள் தான் ரஷ்யப் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, துருக்கி தலைமைத்துவம் அறிவித்துள்ளது.

“துருக்கி ஆகாய எல்லையில் அத்துமீறியதோடு, நாங்கள் விடுத்த எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. எனவே, துருக்கி சட்டப்படி ரஷ்ய விமானம் எஸ்யு 24 சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று துருக்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விமானத்தில் இருந்த விமானிகள் பாராசூட் மூலமாக குதித்துவிட்டதாகவும், எனினும் அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

 

Comments