Home Featured கலையுலகம் மலேசியாவில் குடி, கும்மாளத்துடன் பிரபல படக்குழு கொண்டாட்டம்!

மலேசியாவில் குடி, கும்மாளத்துடன் பிரபல படக்குழு கொண்டாட்டம்!

767
0
SHARE
Ad

shutterstock_103874057

கோலாலம்பூர் – சுவர் இயக்குநர் இயக்கத்தில் உச்ச நடிகர் நடிக்கும் மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் அண்மையில் மலேசியாவில் படமாக்கப்பட்டது.

பகலில் படப்பிடிப்பு முடிந்தவுடன் இரவில் இங்குள்ள பிரபல கேளிக்கை விடுதிகளுக்கு சென்ற அக்குழு, குடி, கும்மாளத்துடன் குத்தாட்டம் போட்டுள்ளதாக நட்பு வட்டாரங்களின் வழி தகவல்கள் கசிந்துள்ளன.

#TamilSchoolmychoice

உச்ச நடிகரோ புகைப்படத்தில் கூட பல முத்திரைகளுடன் போஸ் கொடுத்தபடி, எப்போதும் தியான நிலையில் காட்சி கொடுக்க, படக்குழுவோ இரவெல்லாம் ஆட்டம் போட்டு மௌன நிலையை எட்டியுள்ளது.

பிரபலங்கள் ஆட்டம் போடும் இந்த காட்சிகள் புகைப்படங்களாக தற்போது நட்பு ஊடகங்களில் பரவி வருகின்றது. அதில், பெரிய சைஸ் கண்களோடு ‘உச்சக்கட்டத்தில்’ காட்சி கொடுக்கிறார் அந்த வில்லன் நடிகர்.

அவரோடு, சுவர் போராட்டவாதியும், வெற்றுக்கத்தி நடிகரும், முன்னாள் தொகுப்பாளரும் காணப்படுகின்றனர்.