Home Featured தமிழ் நாடு தமிழக பா.ஜ.க: நெப்போலியன் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்!

தமிழக பா.ஜ.க: நெப்போலியன் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார்!

1011
0
SHARE
Ad

Nepolianசென்னை – தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டார்.

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் மாநில துணைத் தலைவராகவும், புரட்சிகவிதாசன் கட்சியின் மாநில செயலாளராகவும், வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், விவசாய அணியின் மாநில துணைத் தலைவராகவும், முன்னாள் எம்எல்ஏ மணி செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் கலைப்பிரிவின் புரவலராக நியமிக்கப்படுகிறார்.

#TamilSchoolmychoice

முன்னாள் எம்.பி. மலைச்சாமி, மாநில தேர்தல் பிரிவு தலைவராகவும், கர்னல் பாண்டியன் முன்னாள் ராணுவத்தினர் பிரிவின் மாநில தலைவராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா மாநில செயற்குழு உறுப்பினராகவும், கலைப்பிரிவின் மாநில துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை டாக்டர் சரவணன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், மருத்துவ பிரிவின் மாநில பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கீதா ராஜசேகர் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், கலை பிரிவின் மாநில துணைத் தலைவராகவும், குட்டி பத்மினி பிரச்சார பிரிவின் மாநில துணைத் தலைவராகவும், காயத்ரி ரகுராம் கலைப்பிரிவின் மாநில செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.