சென்னை, மார்ச்.13- சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு கதையில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன்.
அந்த படத்தில் நடித்தபோது அவருக்கு இருந்த எதிர்ப்பு விருது அறிவிக்கப்பட்டபோது அடங்கிப்போனது. ஆனால் அதையடுத்து கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானபோதும் அவர் அந்த வேடத்தில் நடிக்க எதிர்ப்பு எழுந்தது.
ஆனால் அதையும் பொருட்படுத்தவில்லை அவர். என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவள் நான். அதனால் எந்த எதிர்ப்புகளுக்கும் தலைவணங்க மாட்டேன் என்று தில்லாக பதில் கொடுத்தார்.
இதுபற்றி வித்யாபாலன் மேலும் கூறுகையில், இப்போது எனக்கு 35 வயது ஆகி விட்டது. இத்தனை வயதுக்குப்பிறகு நான் வெறும் டூயட் மட்டுமே பாடிக்கொண்டிருந்தால் நடிப்பு போரடித்து விடும்.
இது மட்டுமின்றி இன்னும் அரசியல்ரீதியாக எத்தனை அதிரடியான வேடங்கள் என்றாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் நெத்தியடியான அறிவிப்பு ஒன்றை பாலிவுட்டில் வெளியிட்டு தற்போது பரபரப்பு கூட்டியிருக்கிறார் வித்யாபாலன்.