Home கலை உலகம் பெனாசிர் பூட்டோ வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்!

பெனாசிர் பூட்டோ வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்!

577
0
SHARE
Ad

vithyaமும்பை,ஜூன்5- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாறு , படமாகத் தயாரிக்கப்பட உள்ளது.

அந்தப் படத்தில் பெனாசீர் பூட்டோ வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே தமிழகத்தின்  முன்னாள் கவர்ச்சிக் கன்னியாகிய சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான  ‘தி டர்ட்டி பிக்சர்’ என்னும் படத்தில் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். இந்தப் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வென்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில்,அரசியல் சூதாட்டத்தில் குண்டு வெடிப்புக்கு ஆளாகி உயிர் நீத்த பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாற்றில் இவர் நடிக்க இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி வித்யாபாலன் கூறியதாவது:

“இவ்வருடம் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படங்கள் தான் என்னை அதிக அளவில் தேடி வருகின்றன.

ஆனாலும், இதுவரை எந்தவொரு பிரபலத்தின் வாழக்கை வரலாற்றுப் படத்திலும் நடிப்பது தொடர்பாக நான் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்றார்.