Home கலை உலகம் ‘தீரன் அதிகாரம் 1’ இயக்குனர் இயக்கத்தில் அஜித், நடிகைகள் உறுதி செய்யப்பட்டனர்!

‘தீரன் அதிகாரம் 1’ இயக்குனர் இயக்கத்தில் அஜித், நடிகைகள் உறுதி செய்யப்பட்டனர்!

1126
0
SHARE
Ad

சென்னை: நடிகர் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்குப் பின்பு, இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், மாறுபட்டக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது குறித்தச் செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்

விஸ்வாசம் படம் போன்றமாஸ்’ திரைப்படத்திற்குப் பிறகு, அஜித், இம்மாதிரியான படங்களில் நடிப்பது பற்றி இரசிகர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும், மாறுபட்ட கதாபாத்திரத்தில் அவரின் திறமையை அஜித் வெளிக்கொணருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், வினோத் தமிழ் இரசிகர்களுக்கு ஏற்ப கதையை மாற்றி அமைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#TamilSchoolmychoice

இத்திரைப்படத்தில் நடிகை சர்தா ஸ்ரீநாத் அஜித்துடன் நடிக்க இருப்பதாக தயாரிப்புக் குழு உறுதி செய்துள்ளது. மேலும், பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக நடிக்கிறார் எனவும் போனி கபூர் கூறினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை வேறு ஒரு கோணத்தில் காணும் வாய்ப்பினை தாம் அளித்துள்ளதாக போனி குறிப்பிட்டார்.