Home நாடு பெகா பி40 திட்டம் வாயிலாக 800,000 மக்கள் நன்மையடைவர்!

பெகா பி40 திட்டம் வாயிலாக 800,000 மக்கள் நன்மையடைவர்!

784
0
SHARE
Ad

கோலாலம்பூர்பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை இன்று (திங்கட்கிழமை), சுகாதாரஅமைச்சர், டத்தோஶ்ரீ சுல்கிப்ளி அகமட் அதிகாரப்பூர்வமாகஅறிமுகம்செய்து வைத்தார்.

இந்த வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படும் தொற்றா நோய்களின் (என்சிடி) பிரச்சனைகளைக் களைவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என அவர் கூறினார். இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 800,000 பேர்கள் நன்மையடைய உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மலேசியர்களின் நலனில் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சியாக இத்திட்டம் அமையும் என அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தினை மேலும், நன்முறையில் செயல்படுத்துவதற்காக, சுகாதார பரிசோதனைகளுக்காக மருந்தகங்கள், மற்றும் தனியார் ஆய்வகங்களோடு கூட்டு முயற்சியை சுகாதார அமைச்சு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளும் என அமைச்சர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெகா பி40 திட்டத்திற்காக 100 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.