Home கலை உலகம் அஜித்தின் அடுத்த 2 படங்களை போனி கபூர் தயாரிக்கிறார்

அஜித்தின் அடுத்த 2 படங்களை போனி கபூர் தயாரிக்கிறார்

1328
0
SHARE
Ad

சென்னை – நடிகர் அஜித்தின் அண்மையப் படமான ‘விஸ்வாசம்’ தமிழகத்திலும், உலகெங்கிலும் திரையிடப்பட்ட இடங்களிலும் வசூலில் சக்கைப்போடு போட்டுவருவதோடு, திரைப்பட விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

அஜித்தின் ஆகக் கடைசிப் படமான ‘விவேகம்’ வசூல் ரீதியாக வெற்றியடையாத போதிலும், அதனை இயக்கிய இயக்குநர் சிறுத்தை சிவாவையே மீண்டும் அழைத்து தனது அடுத்த படைப்பான ‘விஸ்வாசத்தை’ இயக்கும் பொறுப்பையும் அளித்துத் தன் பெருந்தன்மையைக் காட்டினார் அஜித்.

அதற்கேற்ப சிறந்த முறையில் விஸ்வாசத்தைக் கட்டமைத்து அஜித்தின் கதாபாத்திரத்தையும் நன்கு செதுக்கியிருந்தார் சிறுத்தை சிவா. அஜித்துக்கு சரிசமமாக நயன்தாராவின் பாத்திரத்தையும் வடிவமைத்திருந்தார். அஜித்தின் ஆளுமைக்கு ஏற்ற நேர் எதிர் போட்டி நடிப்பை நயன்தாராவும் வழங்கியிருந்ததுதான் விஸ்வாசத்தின் வெற்றிக்கான காரணங்களுள் ஒன்று என்பது விமர்சகர்களின் பரவலான கருத்தாகும்.

#TamilSchoolmychoice

இதனை அடுத்து, அஜித்தின் அடுத்த படத்தை பிரபல இந்திப்படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரிக்கிறார். வினோத் இயக்குகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வினோத், இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பிங்க்’ என்ற படத்தின் மறுபதிப்பைத்தான் அஜித் நடிக்க இயக்கி வருகிறார்.

அமிதாப் பச்சன் ‘பிங்க்’ படத்தில் ஏற்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்தான் அஜித் நடித்து வருகிறார். இதனை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கவிருக்கிறார்.

அஜித்தின் அடுத்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரிக்கவிருப்பது கோலிவுட்டில் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

2020 வரை அஜித், போனி கபூர் தயாரிக்கும் இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விட்டு, அதன்பிறகுதான் மற்ற படங்களில் நடிக்க அஜித் ஒப்புக் கொள்வார் என அவரது சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.