Home கலை உலகம் கணவரை உளவு பார்க்கும் நடிகை வித்யாபாலன்!

கணவரை உளவு பார்க்கும் நடிகை வித்யாபாலன்!

742
0
SHARE
Ad

Vidya_Balan_20டெல்லி, ஜூன் 1 – கணவரின் நடவடிக்கைகளை உளவு பார்க்க சிறப்பு காவலரை வைத்திருப்பதாக வித்யாபாலன் மீது புகார் எழுந்துள்ளது. தி டர்ட்டி பிக்சர், கஹானி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் வித்யாபாலன்.

தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவந்த இவர் விரைவில் அஜீத் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது பற்றி வித்யாபாலன் இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் வித்யாபாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும், கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை உளவு பார்க்க சிறப்பு காவலரை (டிடெக்டிவ் ஏஜென்ட்டை) நியமித்திருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதுபற்றி வித்யாபாலனிடம் கேட்டபோது, ‘என் கணவரை உளவு பார்க்க சிறப்பு காவலரா? இல்லவே இல்லை. சித்தார்த் ரொம்பவே நல்லவர். எதிலும் எளிமையாக இருப்பார். அவரை உளவுபார்க்கும் அளவுக்கு எனக்கு எந்த வேலையும் அவர் வைக்கமாட்டார் என்றார் வித்யாபாலன்.