Home உலகம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் திடீர் பதற்றம் – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் திடீர் பதற்றம் – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

696
0
SHARE
Ad

cinaசிங்கப்பூர், ஜூன் 1 – மற்ற ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சீனா நடக்கக் கூடாது. தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் அத்துமீறல் நடவடிக்கைகளை சீனா நிறுத்தி கொள்ள வேண்டும்’ என்று சீனாவுக்கு முதன் முறையாக அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் சீனா தன் அதிகாரத்தை காட்டி, அந்த நாடுகளின் சர்வதேச கடல் பகுதிகளில் அத்துமீறல் நடவடிக்கைகளை செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, கிழக்கு, தெற்கு சீன கடல் பகுதியில், மற்ற ஆசிய நாடுகளின் கடல் எல்லைக்குள் எண்ணெய், காஸ் வளங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது என்றும் ஜப்பான் உட்பட சில தெற்காசிய நாடுகள் பகிரங்கமாகவே சமீப காலமாக கூறி வருகின்றன.

இந்த நிலையில், சிங்கப்பூரில் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில்  ஜப்பான், சீனா உட்பட தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அமெரிக்காவின் ராணுவ அமைச்சர் சக் ஹேகல் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இவர் பேச்சு தான் பலரையும் திகைக்க வைத்துள்ளது.   பாதுகாப்பு மாநாட்டில் சீன ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வாங்க் குவான்சுவாங் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் பங்கேற்றனர்.  இவர்கள் தவிர, தைவான், ப்ரூனை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஹேகல் பேசியதாவது, “அமெரிக்கா, எல்லா நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் முழு மதிப்பு அளிக்கிறது. ஒரு நாட்டில் இன்னொரு நாடு ஆக்கிரமிப்போ, அத்துமீறலோ நடத்தக்கூடாது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறது.

இந்த வகையில் தெற்காசிய நாடுகளின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக யாரும் இருக்க கூடாது என்பதிலும் அமெரிக்கா அக்கறை காட்டுகிறது.

தெற்காசியா உட்பட ஆசிய நாடுகளிடையே அமைதி நீடிக்க வேண்டும். நட்புறவு தழைக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா முழு ஒத்துழைப்பு தர உள்ளது. இது சர்வதேச நடைமுறையும் கூட.

இந்த நடைமுறைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த செயலையும், எந்த ஒரு நாடும் செய்ய அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. சமீப காலமாக தெற்கு சீன கடலில் சீனாவின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. அதனால், அந்த தென்கிழக்கு ஆசிய  மண்டலத்தில் உள்ள நாடுகளின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

A US and a Chinese flag wave outside a cஇதை சீனா உணர வேண்டும். அமைதியை நிலைகுலைய வைக்கும் எந்த முயற்சியிலும் சீனா ஈடுபடக்கூடாது” என ஹேகல் காரசாரமாக பேசினார். இந்த பேச்சுக்கு பின், சீன ராணுவ துணை தளபதி வாங்க் குவான்சாங்குடன் ஹேகல் தனிப்பட்ட முறையில் பேச்சு நடத்தினார். அப்போது அவர் பேசியதை வாங்க் சுட்டிக்காட்டி வியப்பும், வருத்தமும் வெளியிட்டார்.

‘நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் இப்படி வெளிப்படையாக பேசியதை நான் வரவேற்கிறேன். ஆனால், உண்மை தெளிவில்லாமல் பேசியது வியப்பாக உள்ளது. சீனா எந்த அத்துமீறலிலும் ஈடுபட்டதில்லை.

ஆனால், மற்றவர்கள் அத்துமீறினால் அதற்கு கண்டிப்பாக பதிலடி தரும்’ என்று வாங்க் பதில்  அளித்தார். ஆனால், ஹேகல் அதற்கு மேல் விளக்கம் தரவில்லை. ‘சீனாவுடன் அமெரிக்கா ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அந்த வகையில் அமைதிக்கும் ஒத்துழைக்கும் பொறுப்பு உள்ளது’ என்று மட்டும் அவர்  கூறினார்.

இதைபற்றி ஜப்பான் பிரதமர் அபே பேசுகையில், “தென் கிழக்கு ஆசிய அமைதிக்கு  பங்கம் விளைவிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதற்கான எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபட தயாராகி விட்டது ஜப்பான். தெற்காசிய பாதுகாப்புக்கு முன்னின்று செயல்படவும் நாங்கள் தயார்’ என்று கூறியது மாநாட்டில் பலரையும் திகைக்க வைத்தது.

சீன பிரதிநிதி வாங்க்  முகம் இறுகிப்போனது. ‘பிலிப்பைன்ஸ், வியட்நாம் கடல் பகுதிகளில் நடக்கும் அத்துமீறல்களுக்கு பதிலடி தர ஜப்பான் தன் கடலோர பாதுகாப்பு படையை அங்கு நிறுத்தும் என்றும் அபே சொன்னதும் வாங்க் கோபம் அதிகரித்தது.

அபே பேசியதற்கு பதில் அளித்து வாங்க் கூறியதாவது, ‘அடிப்படையே இல்லாமல் சீனா மீது குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானது, ஆதாரமற்றது.

ஜப்பான் தன் தவறை உணராவிட்டால், சீனாவுடனான உறவு நீடிக்காது’ என்று பதிலுக்கு எச்சரித்தார். ஜப்பான் பேசியதற்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் ஹேகல் மவுனமாக இருந்தது, அந்த நாட்டின் ஆதரவு ஜப்பானுக்கு இருக்கிறது  என்பதையே காட்டியது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ஹேகல், “ஜப்பான் முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது. நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். எங்களுக்கு ஆசிய அமைதி தான் முக்கியம்’ என்று சொன்னார்.

ஜி ஜின்பிங்இதனிடையே, சீன அதிகாரப்பூர்வ செய்தி  ஏஜன்சி ஜின்குவா வெளியிட்ட செய்தியில், “நாங்கள் எப்போதும் அடுத்தவர் அமைதியை குலைத்தது கிடையாது. மற்றவர்கள் குற்றச்சாட்டுக்கு தேவையான முறையில், நேரத்தில் பதில் அளிப்போம்’ என்று சீன பிரதமர் ஜி ஜின்பிங் கூறியதாக வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதமாகவே சீனா – ஜப்பான் உட்பட தெற்காசிய நாடுகள் இடையே பனிப்போர் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இது  பெரிதாக வெடிக்கும் என்று தெரிகிறது.