Home Featured இந்தியா சோனியாவிற்கும், மன்மோகனுக்கும் மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து!

சோனியாவிற்கும், மன்மோகனுக்கும் மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்து!

522
0
SHARE
Ad

PM-Modi-invites-Sonia-Gandhiபுது டெல்லி – இந்தியா முழுவதும் ஒரே சீரான வரியை (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ம் தேதி முதல் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் எப்படியும் சரக்கு மற்றும் சேவை வரி சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு முயற்சித்தும் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பினால், முடியாமல் போனது. இந்நிலையில், நேற்று துவங்கி உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தாக்கல் செய்து விட வேண்டும் என பாஜக முடிவு செய்துள்ளது. அதற்கான ஒரே வழி காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தும் முயற்சி தான்.

இதற்காக மோடி, இன்று தனது இல்லத்தில் தேநீர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் கலந்து கொள்வதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டது அதன்படி, கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சோனியாவும், மன்மோகன் சிங்கும் பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஜிஎஸ்டி தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.