Home Featured தொழில் நுட்பம் கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம் – லைஃபை இருந்தால்!

கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம் – லைஃபை இருந்தால்!

659
0
SHARE
Ad

li-fiகோலாலம்பூர் – உலக அளவில் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் கருதி இணையம் சார்ந்த கருவிகளின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே உள்ளது. இணையத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ அதை விட பல மடங்கு, தகவல் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்ப தேவைகளும் அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் தகவல் பரிமாற்றத்தின் அளவு 35 க்வின்ட்டில்லியன் பைட்சாக (Quintillion Bytes) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நாம் தற்போது பயன்படுத்தி வரும் வைஃபை  தொழில்நுட்பமான, மின்சாரப் பயன்பாடு உள்ள காலத்தில் தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நடப்பதற்கு சமமாகி விடும். அதனால் எதிர்கால தேவை கருதி ஆராய்ச்சியாளர்கள் லைஃபை (Lifi) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தயாராகி வருகின்றனர்.

வைஃபை தொழில்நுட்பத்தை விட 100 மடங்கு அதிக திறன் கொண்ட இந்த லைஃபை தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தால் நமது எதிர்கால இணைய வேகம் நமது தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

lifiபரிசோதனையில் முயற்சியில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் அடுத்த சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

‘வயர்லஸ் ஃபிடெலிட்டி’ (wireless fidelity) என்பதன் சுருக்கம் தான் wifi. அதேபோல், ‘லைட் ஃபிடெலிட்டி’ (wireless fidelity) என்பதன் சுருக்கம் Lifi. எல்ஈடி (LED) விளக்குகள் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதே இதன் வியக்கத்தகு தொழில்நுட்பம். இணைய உலகை அடுத்த சில வருடங்களுக்கு இந்த தொழில்நுட்பம் தான் ஆள வருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.