மாஸ்கோ – இந்தியா பயணம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு இல்லை என்று கூறி, பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா, இந்தியாவின் பெயரை நீக்கியதாக செய்திகள் வெளியாகின. இந்த அறிவிப்பு கோவாவில் இருக்கும் ரஷ்ய தகவல் தொடர்பு மையத்தில் இருந்து வெளியானதால் இந்தியா, ரஷ்யா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
சமீபத்தில் ரஷ்ய பயணிகள் விமான எகிப்து நாட்டில் தீவிரவாத தாக்குதலால் வீழ்த்தப்பட்டது. 224 பயணிகள் பலியான அந்த சம்பவமும், துருக்கியில் ரஷ்யாவின் போர் விமான சுட்டு வீழ்த்தப்பட்டதும் அந்நாட்டை கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது.
எகிப்து நாட்டிற்கு முற்றிலும் விமான போக்குவரத்தை துண்டித்த ரஷ்யா, துருக்கி மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில், தான் பாதுகாப்பான பயணங்களுக்கு உகந்த நாடுகளின் பட்டியலை ரஷ்யா தயாரித்துள்ளது. அதில் இந்தியாவின் பெயரை நீக்கியதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே இது பற்றிய செய்திகளை ரஷ்ய தகவல் தொடர்பு மையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய நகரங்களும், குறிப்பாக கோவாவும் ரஷ்யர்கள் விரும்பி பயணம் மேற்கொள்ளு இடங்களாகும். அதனால், இந்தியா பாதுகாப்பற்ற நாடு என எங்கள் தரப்பில் இருந்து வெளியானதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என அந்த ரஷ்ய மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.