Home Featured உலகம் செல்லியல் முக்கியச் செய்திகள்!

செல்லியல் முக்கியச் செய்திகள்!

618
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-5121. கோத்தா கினபாலுவில் இன்று நள்ளிரவு முதல் முனையம் 2 மூடப்பட்டு, அனைத்து விமானப் போக்குவரத்துகளும் முனையம் 1-ல் செயல்படத் தொடங்கும்.

2. சபாவைச் சேர்ந்த பெர்னாட் தென் என்ற மலேசியரை தலையை வெட்டிக் கொலை செய்த அபு சயாப் அமைப்பைச் சேர்ந்த இருவர் பிலிப்பைன்சில் பிடிபட்டுள்ள நிலையில், அவர்களை மலேசியாவிற்குக் கொண்டு வர காவல்துறை முயற்சி செய்வதாக ஐஜிபி காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

3. 1எம்டிபி விவகாரத்தில் தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வரும் டிசம்பர் 17-ம் தேதி, பொதுக் கணக்குகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

#TamilSchoolmychoice

4.துருக்கி எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் போர் விமானத்தில் இருந்த விமானியின் சடலத்தைக் கைப்பற்றிய துருக்கி அதை ரஷ்ய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளது.

5. 2030-ல் கார்பன் வெளியேற்றத்தை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் – மோடி

6. அஜித்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்க இருப்பதாகத் தகவல்!

7. மோடி-நவாஸ் ஷெரிஃப் சந்திப்பு, ‘ஆக்கப்பூர்வமான தருணம்’ என பாகிஸ்தான் ஊடகங்கள் பாராட்டு!